Sunday, April 15, 2007

பெற்ற மனம்…

.

ஹைய்யா… ஆச்சி வர்றாங்க குழந்தை வாசலிலிருந்து குதித்து ஓடி மீண்டும் பின்னால் திரும்பி அம்மாவிடம் சொல்ல அடுக்களை நோக்கி ஓடியது.காயத்ரி வெண்டைக்காய் நறுக்கி கொண்டிருந்தாள்.
அம்மா… அம்மா…ஆச்சிவர்றாங்க
சனியனே! அதுக்கு ஏன் இந்தப் பிராண்டு பிராண்டுறே. போ…போயி விளையாடு.ஜன்னல்
வழியாக அவள்; பார்வை சென்றது. மஞ்சள் பை… இரண்டு சேலை இரண்டு ரவிக்கை
குழந்தைகளுக்கு ஏதாவது திண் பண்டங்கள் இவ்;வளவுதான் அதற்குள் இருக்கும்;
வாங்கத்தை… வணக்கம்… பாயை உதறி தரையில் விpத்தாள் .
சின்னக்குழந்தை தஞ்சாவூர் பொம்மையை தட்டி தட்டி விளையாடியது.
சங்கரன் எப்பம்மா வருவான?;.
எட்டு மணியாகும்.
ஏன்? இவ்வளவு தாமதமா வர்றான்.ஆறு மணிக்கெல்லாம் ஆபிஸ் முடியுதே: முன்னே மாதிரி அவன் இல்லை .போட்ட லெட்டருக்கு பதில் கூட எழுதறதில்லை காயத்ரி. குழாயை திறந்து விட்டு கை கால்களை அலம்பினால்.
அவருக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்காம்.கொஞ்சம் கூட ஓய்வே கிடையாதாம்.
ராஜா… இங்க வாடா… இதெ ஓடையிலே போட்டு வா…உறிச்ச வெங்காயத் தோலை பேப்பரில் மடக்கி பையன் கையில் திணித்தாள்.
துண்டு வாங்கி துடைத்து காற்றாடியை சுழலவிட்டு பயணக் களைப்பால் பாயில் படுத்தாள் பார்வதியம்மாள்
காயி…யாரோ… விருந்து வந்திருக்காப்ல இருக்கே…
ஆமா....மாமி. ஊர்ல இருந்து அத்தை வந்துருக்காங்க.
வயசான காலத்துல ஒரு இடத்துல இருங்கன்னா கேக்கறதில்லே…அங்கேயும் இங்கேயுமா லோல் பட்ட பொழப்புதான்.இவங்கள்லாம் வந்து பாக்கலைன்னு யாரு கோவிச்சா. கேட்டா பெருசா சொல்லிருவாங்க நாளாச்சுன்னா குழந்தைகளை பாக்காம இருக்கமுடியலைன்னு.அப்படி பெருமையாசொல்லிட்டுவந்து அம்பதைக் கொடு நூறெக் கொடுன்ன வாங்கிட்டு போயிருவாங்க.வாங்குற சம்பளத்திலே இங்கே வாடகை கொடுத்தே
கட்டுபடியாகலை.இதுல இப்ப கரண்டு சார்ஜ் வேற கூட்டிட்டான். பட்டண வாழ்க்கை எங்கே இவங்களுக்கு புரியப் போகுது.
அதோ … பாருங்க… ஃபேனை முழு வேகத்துலே வச்சிட்டு தூங்குறதெ.அவங்களுக்கென்ன சொகுசா ரெண்டு நாளு மகன் வீடு தானேன்னு இருந்துட்டு போயிடுவாங்க மாசம் பூராவும் கஷ்டப் படுறது நாங்கதான்.
எங்க ஆத்து கதெ என்ன மோசப்பட்டதா காயத்ரி பங்களா மாதிரி ரெண்டு விடு இருக்கறச்சே மாமியும் மாமனும் எங்க வீடே கதின்னு கெடக்கலியோ விடு;. வீட்டுக்கு வீடு வாசப் படிதான்.
பார்வதியம்மாள் புரண்டு படுத்தாள் வந்த உறக்கம் எங்கோ போய்விட்டது. பெண்களின் பேச்சுவெகுவாக பாதித்து கண்ணீர் சிறிதாக தலையனையை நனைத்தது.
அன்பு பந்தம் பாசம் எல்லாமே பொய்தானோ.நான் தான் புரியாமல் தவிக்கிறேனோ.ஆண்டவனே! வயதான காலத்தில்
ஏன் இந்த சோதனை.
என்ன தான் சொல்லுங்க மாமி நீங்க கொடுத்த வச்சவங்கதான்.மாமாவும் மாமியும் ரிடையர்டு பென்ஸனையும் எங்க வீட்டு செலவுக்கெ பயன் படுத்துறாங்க அப்புறம் என்ன?
அடியே காயத்ரி என் அருமை மருமகளே உன்னை பெண் பார்க்க வரும் போது என் பையனிடம் நல்ல பெண் டா குடும்ப லட்சணமா இருக்கா அமைதியானவள் எனறெல்லாம் சர்ட்டிபிகேட் கொடுத்தேனே! ரெண்டு குழந்தைக்கு தாயானதுக்கு அப்புறம் பொய்யின்னு நிரூபிக்கிறீயா? உன்னை புரிஞ்சுக்கவே முடியலைடி… என்று மனதுக்குள் வெதும்பினாள்.
காயத்ரியும் மாமியும் எதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நரையோலையைக் கண்டு குறுத்தோலை சிரிக்குது நமக்கென்ன . பரவாயில்லை பேசட்டும் மீண்டும் பாயில் சுருண்டு கொண்டாள்.

மா மரத்தில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. த்தோ… மாமா வந்துட்டார் என்று சொல்லி முடிக்கும் முன் …
லட்சுமி… ஏய் லட்சு என்று குரல் கொடுத்தார்.
த்தோ… வந்துட்டேன்னா மாமி பறந்து விட்டாள்.
அத்தை…அத்தை எழுந்து சாப்பிட வாங்க .
வேணாம்மா களைப்பா இருக்கு நான் அப்புறம் சாப்பிடுறேன்.
களைப்பு இப்போது உடலில் அல்ல மனதில்.
ஏன்னா…கேட்டேளா சங்கதி நீங்க அடிக்கடி சொல்லுவேளே அடுத்த வீட்டு காயத்ரி கபடமில்லாதவ குடும்ப பொறுப்பானவன்னு அது தப்புன்னு படுறது.
எத வச்சு சொல்றே சாதத்தை கையில் எடுத்தவாறே கேட்டார்.
ஆம்படையாண்டெ அம்மா வந்துருக்கா அவா வச்சதுக்கும் எடுத்ததுக்கும் கொறை சொல்றா
ஒரே பொறுமல் நம்ம வீட்டைக் கண்டு பொறாமெ நான் கொடுத்து வச்சவங்கறா.

ஏன்னா தெரியாமத்தான் கேக்குறேன்… பொம்மனாட்டிக்கு பொம்மனாட்டி இப்படி முரண்பாடா
இருக்காலே…பின்னே பெண்ணுக்கு இழைக்கும் கொடுமை ஒழியனும்னு பெண் விடுதலை பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்.மாமியும் பெண் மருமகளும் பெண் …பெண் ஒருத்தரை ஒருத்தர் மட்டம் தட்டுறா… அடக்கப் பாக்குறா …முடியாத பட்சம் முரண்பாடு வர்றது. முதல்ல பெண்களுக்குள்ளே சகிப்புத்தன்மை வேண்டாமோ!.மாமியா கொடுமை வெளியிலே வர்றது மருமக கொடுமை அவ்வளவா வெளிலே வர்றதில்லே….மாமியா ஒதுங்கிர்றா அல்லது பக்குவப்பட்ட வயது சகிச்சுப்போறா… சக்தியுள்ளவங்க அடக்குறாங்க. முதல்ல பெண்களே பெண்களை அடக்காமெ இருக்கப் பழகனும்.
உனக்காவது புரிஞ்சுதே... அப்பாடி நான் தப்பிச்சேன்…ராகவன் கை கழுவி துண்டை உதறி தோளில் போட்ட படி எழுந்து வரந்தாவுக்கு வந்தார்.
கூடவே லட்சுமியும் வெத்தலையெ மடித்த படி அதுமட்டுமில்லேன்னா…காயத்ரியோட அம்மா
வரட்டும்… முகத்துல ஒரு களை கட்டி நிற்கும்…பல வகையான காய்கறிகளோட சமையல் நடக்கும்;;;;;;… ஒரே கொண்டாட்டம் தான்.

பாவம் அந்த அம்மாவும் சரி மகனும் சரி எதையும் கண்டுக்கிறதில்லை.
கண்டுக்கிறாத வரைக்கும் குடும்பத்துக்கு நல்லது. விடு அடுத்தவங்க பிரச்னை நமக்கு எதுக்கு கொடு இப்படி .வெத்தலையை வாங்கி ஒதுக்கிக் கொண்டார்.
பகல் பொழுதை உறங்கியே கழித்த பார்வதி மகன் எப்ப வருவான் என்ற ஏக்கத்தோடு காத்துக்கிடந்தாள்.சரியாக எட்டு மணிக்கு கையில் சிறிய ப்ரீப் கேசுடனும் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்களுடனும் மகன் ஆட்டோவில் வந்த இறங்கவதைக் கண்டு ஆனந்தத்தில் திளைத்தால்;. ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதுவரை பார்வதி படுத்திருந்த படுக்கையை இப்போது காயத்திரி பிடித்துக் கொண்டாள்
காயா… என்ன எட்டு மணிக்கு படுக்கை… குழந்தைகளுக்கு வாங்கி வந்த விளையாட்டு சாமான்களை பிரித்துக் காட்டினான்;.
முகத்தை திருப்பிக் கொண்டாள்.
என்ன உடம்பு சரியில்லையா நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.
குறத்தி ஜாலம் போடகிறாள்…கையைப் பிடித்து இழுத்தான்.
நெளிந்தாள்… மீண்டும் படுத்தாள்… அதற்கு மேல் அவளுடன் விளையாட விருப்பமும் நேரமும் இல்லாதவனாய்
பாத் ரூமில் நுழைந்தான் சங்கரன்.
குளித்து முடித்து உணவுக்கு உட்கார்ந்தான்…அம்மாவும் அருகில் அமர்ந்தாள்;
என்னம்மா ஏதாவது பேசிக்;கிட்டீங்களா…;குரங்கு உம்னு இருக்கு காயத்ரியின் காதில் விழாத படி கேட்டான்;.
கொரங்குன்னு யாரப்பா சொன்னீங்க …குழந்தை கேட்டது.
உன்னுடைய அம்மாவெத்தான்…
மனிதக் கொரங்கன்னு சொல்லுங்கப்பா….சொல்லிவிட்டு அம்மா வருகிறாளா என்று திரும்பி
பார்த்தது.
நல்ல ஆச்சி… பார்வதியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.
பாசம் தான குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஏதாவது பேசக்கிட்டிங்களா மீண்டும் கேட்டான்.
இல்லையே! நான் வந்ததுலேருந்து இப்படித்தான் இருக்கா…ஏதாவது கேட்டா கேட்டதுக்கு
மட்டும் பதில் சொல்றா.பக்கத்து வீட்டு மாமிகிட்டெ எதேதோ சொன்னா…அதெல்லாம் இப்ப எதுக்கு சாப்பிடு.
சாப்பிட்டு முடித்து தாம்ப+லம் போட்டுக்கொண்டே ஊர்க்காரியங்களையும் உறவுகளையும் பத்தி
விசாரித்தான் .
நான் வந்த விஷயம் சொல்லவே இல்லையப்பா மழைக்காலம் வருது வீட்டை ரிப்பேர் செய்யனும் அதுக்க கொஞ்சம் பணம் வாங்கி போகலாம்னு வந்தேன்.
இப்ப ஏதுமா பணம் அடுத்த வாரம் ஊருக்கு வர்றேன் அப்ப பார்க்கலாம்.யோசனையில் ஆழ்ந்தான்.அந்த சிறிய அம்மாவின் குடிசை கண்முன் தோன்றி எரிச்சலூட்டியது.
குழந்தை பார்வதியின் மடியில் படுத்துக் கொண்N;ட கன்னத்தை கிள்ளி கிள்ளி ரசித்தது.
நீ… என்னடி கம்முன்னு இருக்கே சங்கரனின் கவனம் மனைவி பக்கம் திரும்பியது.

எப்பவும் போலத்தான் இருக்கேன்…அம்மா வந்துட்டாங்கல்ல இனி அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.மோவாய்க்கட்டையை தோளில் இடித்து கோபத்தோட உள்ளே சென்று படுத்துக்கொண்டாள்.
கழுதை வந்து வாச்சிருக்கு பாரு …எழுந்து பின்னால் சென்றான்.
சங்கரா… வா … இப்படி பார்வதியின் அதட்டல் காதில் விழாதவனாய் காயத்ரியை இழுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றான்.
உள்ளே மடார்…மடார் என்ற சப்தங்கள் சில காலி தகர டப்பாக்களும் உருண்டு ஒளிந்தன்.
ச்சே என்ன வாழ்க்கை வெறுப்போடு வெளியே வந்த சங்கரன் போடா போயி தூங்கு நீ ஏன் இன்னும் தூங்கலை போ…போ … என்று குழந்தையை விரட்டினான். குழந்தை பயந்து பார்வதியின் தோளோடு தோளாக ஒட்டிக்கொண்டது.
ஒரு வெறுமையான இரவு விடியலை எட்டிப்பார்த்த்து. வழக்கமான காரியங்கள் முறையாக நடந்தது. இரவு சச்சரவின் எந்த தழும்புகளும் காயத்திரியிடமோ சங்கரனிடமோ காணவில்லை.


பார்வதியின் மனம் தான் பதட்டப் பட்டது. காயத்ரியை காணக் கூட சக்தியில்லாதவளாய் புழுவாக நெளிந்து கொண்டிருந்தாள்.
சரி சங்கரா நான் புறப்படுகிறேன்.
ஏம்மா அதுக்குள்ளே…ரெண்டு நாளு இருந்துட்டு போங்களேன்…எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.இல்லப்பா… நான் போறேன்… நீ அடுத்த வாரம் கட்டாயம் வா. கண்களில் நீர் திரண்டது;. விடை பெற்று பஸ் ஸ்டான்டில் காத்திருந்தாள்.
பெரியம்மா பிஞ்சு வெள்ளரிக்கா ரூபாய்க்கு ஆறு தர்றேன்.
நாகரீகமில்லாத பெண்.அவளது வியாபாரத்தில் இருந்த நாகரீகமும் பேச்சில் உள்ள கனிவும்
அன்பும் பார்வதியை என்னம்மோ செய்தது.
ஒரு ரூபாய்க்கு வாங்கி ஒன்றை அழுக்கு நீக்கி கடித்து நிமிர்ந்த போது தூரத்தில் மகனும்
மருமகளும் பேசி சிரித்த படியே மருத மலை பஸ்ஸில் ஏறுவதைக் கண்டு அட… சங்கரா….
என்ற படி நெஞ்சைப் பிடித்தாள் .விழிகள் அசையவில்லை.

0 comments: