Sunday 18 May 2008

கூடாதவையொழி. (குருமதிமாலை)

பீடியுஞ்சுருட்டுமுந்தன்
நாடியைத் தளர்த்திமிகத்
தேடிவரும் நோய்கள் பலவே- உடலுருகி
ஓடியேகுமாவி மெல்லவே.

கருத்துரை:-

பீடி,சுருட்டு,கஞ்சா,அபினி போன்ற லாகிரிப் பொருள்களை உபயோகித்தால் , அதன்மூலமுனது நாடியோட்டமுங்குன்றி, நரம்புகள் தளர்ந்து , தீயனவாகிய பலவித நோய்களும் பீடித்து, ஆவியுங்குறுகி
உடலுஞ்சீக்கிரமழிந்து போகுமென்பதை ஆராய்ந்து , ஆரோக்கியவழிகளை அவசியங் கடைபிடித்தொழுகு.

புகைகுடிப்பதினாற்
றிகைப்புநோய்சூழும்.

0 comments: