கேரளாவில் இயற்கை சூழலில் வாழ்ந்துவிட்டு டெல்லியில் இருப்பது என்பது சந்திரிகாவின் தந்தைக்கு சற்று சிரமமாக இருந்தது. பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. இரவு எட்டு மணிக்கு ஊருக்கு புறப்படுகிறார். சந்திரிகாவுக்கு அப்பா ஊருக்கு போவதை நினைத்தால் மனம் சற்று கனத்தது. பக்கமாவா இருக்கு அடிக்கடி போய் பாக்க. அப்பாவுக்கென ஒரு பரிசு வாங்கி வைத்தது ஞாபகம் வந்தது . மறக்காமல் கொடுக்க வேண்டும். சரி …இப்பவே கொடுத்திடலாம் என்று யோசித்துக் கொண்டே அப்பாவை அழைத்தாள்.
அப்பா…அப்பா…
என்னம்மா…இதோ வர்றேன்
இந்தாங்கப்பா…உங்களுக்குன்னு ஒரு செல் போன் வாங்கினேன்.ரெம்ப நாளா கொடுக்கனும்னு நினைக்கிறது ஆனா மறந்து போயிடுறது. பத்திரமா வச்சுக்கோங்க …எத்தனை நாளைக்குத்தான் அந்த பழைய லேன்ட் லைனை நம்பியே இருப்பீங்க.
சரிம்மா…உபயோகப் படுத்திக்கிறேன் .நானும் செல் ஒன்னு வாங்கனும்னுதான் நினைச்சேன் .நல்ல வேளை நீயே வாங்கி கொடுத்திட்டே ரொம்ப சந்தோசம். சுதர்சனும் சந்திரிகாவும் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு வந்தனர்.
சந்திரிகாவின் தந்தை கிருஷ்ணன்குட்டி எப்பவும் அந்த பழைய லேன்ட்லைனை நம்பித்தான் இருப்பார்,அதுவும் சமயத்திலே வேலை செய்யாம போயிடும். ஏன்னா பக்கத்துவீட்டு சுவரும் இவரு வீட்டு சுவரும் ஒரே சுவரு அதுலதான் டெலிபோனை மாட்டி வச்சுருந்தாரு. சுவரின் மறுபக்கம் வயதானவர் கட்டில்ல படுத்துக்கிட்டு கேஸ் விட்டதுல சுவர்ல அதிர்வு ஏற்பட்டு டெலிபோன் வயர் லூஸ் கனைக்ஷன் ஆயிருச்சு. அதுல இருந்து விட்டு விட்டுத்தான் பேசுறது கேக்கும். இனி கவலை இல்லை அவருக்கு செல் கெடைச்சிருச்சு.
ஒரு நாள் கிருஷ்ணன்குட்டி சுதர்சனுக்கு போன் செய்தார்.
என்ன சுதர்சன் எப்படி இருக்கே?
நல்லா இருக்கேன் அச்சா…நீங்க எப்படி இருக்கீங்க…
நல்லா இருக்கேன். என்னப்பா நீ போனே செய்ய மாட்டீங்கறே…முன்ன மாதிரி இல்ல சுதர்சன் இப்போ.
என்ன அச்சா சொல்றே…நான் ரெண்டு மூணு தடவை போன் செய்தேன் அச்சன் வீட்ல இல்ல.வெளில போயிருக்கிறதா சொன்னாங்க.
அப்ப செல்லுக்கு போன் செய்ய வேண்டியது தானே!
செல்லா…செல் நம்பர் என்ன அச்சா…
உனக்கு தெரியாதா? நீங்க தானே கொடுத்தீங்க…சந்திரிகாவுக்கு தெரியும் செல் நம்பர்…அவதானே எனக்கு கிப்டா கொடுத்தது.
சரி இப்போ செல் யூஸ் பண்றீங்களா.
ஆமா…டெய்லி சார்ஜர்ல போடுவேன் . வெளில போகும் போது பாக்கெட்ல போட்டுக்கிருவேன்.
யாருக்காவது போன் செய்தீங்களா?
இல்ல…நான் செல் இன்கம்மிங் காலுக்கு மட்டும் யூஸ் பண்றேன்.
இன்கம்மிங் கால் வருதா?
ஒரு கால் கூட வரலை.
ஏன் வரலை?
யாருக்கும் நம்பர் கொடுக்கலை.
எர்ணாகுளம் பஸ்டான்ட்ல எழுதி போடுங்க …நிறைய கால் வரும்…சுதர்சன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
நம்பரை கொடுக்க வேண்டியது தானே!
நம்பரைத்தான் சந்திரிகா சொல்லலையே…செல்லை மட்டும்தானே கொடுத்தா.
நம்பர் என்னன்னு நீங்க கேக்கலையா.
நான் கேக்கலை. ஆனா அவ சொன்னபடி எட்டு மணி நேரம் சார்ஜ்ல போட்டேன் ,அப்புறம் தினமும் ஜார்ஜ் பண்றேன். அப்படியிருந்தும் ஒரு காலும் வரலை.
எத்தனை மாசமா வச்சுருக்கீங்க.
அங்கே இருந்து வந்து ரெண்டு மாசம் இருக்குமா…இருக்கும் கிட்டதட்ட ரெண்டு மாசம் ஆகுது.
அப்ப பில் எவ்வளவு வருது.
பில்லும் வரலை. பேசாததுக்கு பில்லு எப்படி வரும்.
அச்சா…செல் யூஸ் பண்றீங்க அதுக்கு உள்ள வாடகையாவது பில்லுல்ல வரணும்ல.
சந்திரிகா சொந்தமா வாங்குன செல்லுக்கு வாடகை எதுக்கு கொடுக்கனும்.
இது வரைக்கும் ஒன்னும் வரலை. செல்லு வாங்கும் போதே பில்லு கொடுக்குறானே...செல்லுக்கான பில்லு ஏங்கிட்டேதான் இருக்கு.
அச்சா...இதற்கு மேல் ஒன்றும் கேட்க தோன்ற வில்லை. சுதர்சன் கொஞ்ச நெரம் அமைதியானான்.
சரி…அச்சா…செல்லுல்ல ஏதாவது கோளாறு இருக்கும் . நான் நம்ம கிஷோரை வரச்சொல்றேன் அவங்கிட்டே செல்லைக் கொடுங்க சரியாக்கி கொடுப்பான்.
நல்லது…அப்ப வச்சுரட்டுமா…தொடர்பை துண்டித்தார் கிருஸ்ணன்குட்டி.
சுதர்சன், கிஷோரை அழைத்து ,அச்சனின் செல்லை ஆக்டிவேட் செய்யச்சொல்லி ஒவ்வொரு மாதமும் வரும் பில்லை தனது பெயருக்கு அனுப்ப சொன்னான்.
கிருஷ்ணன்குட்டி பாக்கெட்டில் உயிரில்லா செல் பயணம் செய்ததை நினைத்து சுதர்சனுக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருந்தது.
Saturday 28 June 2008
Thursday 26 June 2008
எல்லாம் எதற்காக…
வானத்தின் உச்சியிலே வர்ணஜாலம்
வண்ண வண்ண மேகத்தினால் வர்ணக்கோலம்
பாணத்தை விட்டது போல் எரி நட்சத்திரம்
பறந்து வந்து விழுகிறதே பூமி மேலே
கானத்தை இசைக்கின்றார் யாரோ அங்கு
காற்றாக நம் உடலில் இனிமை கூட்டும்
தானத்தை தகுதியாக தரம் பிரித்து
தவளவிட்டார் பூமி மேலே உயிர்களாக
ஊனத்தை உயிரினத்தில் படைத்துவிட்டு
உருப்படியாய் வாழவழி காட்டிவிட்டார்
மானத்தை மறைக்க நல்ல ஆடைகளும்
மனிதனுக்கு வேண்டுமென்று தோன்றச் செய்தார்
கோடையிடி கொடி மின்னல் குமுறலாக
கொட்டும் மழை காற்றும் மிக வேகமாக
வாடையடியென்று சொல்லி ஆடும் தேகம்
வாய் பேசா ஊமையாக அழுகும் மேகம்
கண்ணீராய் சிந்துகின்றாள் மேகம் இன்று
தண்ணீராய் தாகம் தீர்க்கும் ஆறாய் சென்று.

Tuesday 24 June 2008
என்ன போடுறாங்க…
யக்கா…ரேசன் கடைக்கா போயிட்டு வர்றீக…ரேசன்ல என்ன போடுறாக…
சன்டை போடுறாக…சர்வ சாதாரணமாக சொல்லி சென்றாள் மரகதம்மாள்.
என்ன இவ… இப்படி சொல்லிட்டு போறா…முணுமுணுத்துக் கொண்டாள் முத்தம்மா.
இன்னிக்கு என்ன சொல்லப் போறானோ …இந்த ரேசன் கடைக்காரன். ரேசன் கடைக்காரன் சும்மா இருந்தாலும் , பில்லுப் போடுறவனும, நிறுத்துப் போடுறவனும் சும்மா இருக்க மாட்டேங்கிறாங்கே…ரேசன் வாங்கப் போனா பிச்சை எடுக்கப் போற மாதிரி பாக்குறாங்கே. பில்லுப் போடுற பிச்சைப்பய எப்ப பாத்தாலும் வல்வல்லுன்னு விழுறான் என்னம்மோ அவன் சொத்தைப் புடுங்கிட்டு போக வந்த மாதிரி…புலம்பிக் கொண்டே சென்றாள் முத்தம்மா.
யக்கா… பாண்டியக்கா… ரேசன்ல அரிசி போடுறாகல்ல .போ…போ…சீக்கிரம் போ…நல்ல அரிசியா இருக்கு போறதுக்குள்ளே மூடை மாறினாலும் மாறிரும் .
முத்தமா ஓடாத குறையாக ஓடினாள்.
பிச்சை அண்ணே…நல்ல அரிசியா போடுங்க.
ஏம்மா…இருக்குற அரிசிதாம்மா போடமுடியும்.அரிசி நாங்களா செய்யுறோம்.
அண்ணே…மக…பிள்ளை பெத்துருக்கா…கொஞ்சம் நல்ல அரிசியா போடுங்கண்ணே.
ஏம்மா…ஓவியத்துக்கு ஓம் மக மட்டுந்தான் புள்ளை பெத்துருக்காளா…இதையே வருசம் பூராவும் சொல்லு …பெத்த புள்ளைக்கு கல்யாணம் ஆயி அதுக்கும் பிள்ளை பிறந்திருக்கும்…மாத்தி சொல்லும்மா ஏதாவது.
அப்படி சொல்லாதீங்கண்ணே…
ஏம்மா…அரிசி இதான் இருக்கு வாங்குன்னா வாங்கு இல்லை எடத்தைக் காலி பண்ணு வளவளன்னு பேசிக்கிட்டு.
வர்றவங்க எல்லாம் முதல் போட்ட மாதிரி ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாங்கய்யா…பொறுப்பாளர் இடையில் புகுந்தார்.இங்க பாரும்மா…அரிசி வாங்குறதுன்னா பத்தாம் தேதிக்குள்ளே வந்து வாங்கனும் . அதுக்கு மேலே வந்தைன்னா அரிசி கெடைக்காது பாத்துக்கோ பிச்சை கண்டிசன் போட்டான்.
அய்யா…நாங்க கவர்மென்டு உத்தியோகம் பாக்கலையா ஒண்ணாம் தேதி ஆனதும் சம்பளம் வாங்க. நாங்க கூலிக்காரவுக…எங்களுக்கு எப்ப கைல பணம் கெடைக்குதோ, அப்பதாங்க ரேசன் வந்து வாங்க முடியும்.
சட்டம் பேசாதேம்மா…
நீங்கதானங்கய்யா சட்டம் போடுறீக…பத்தாம் தேதிக்குள்ளே வந்து வாங்கனும்ன்னு… கவர்மென்ட் ஒன்னும் சொல்லலையே. மாசத்துல ரெண்டு தடவை வந்து வாங்கலாம்னு தானய்யா போட்டுருக்கு. நான் ஆபீசர்கிட்டெ போயி கேக்குறேன்யா.
ஏய்…இந்தாப்பா பிச்சை…அந்த பொம்பளைக்கு அரிசியைப் போட்டு அனுப்புய்யா…வளவளன்னு பேசிக்கிட்டு…பொறுப்பாளர் பொங்கியெழுந்தார்.
ஆபீசர்கிட்டே போயி கேளு பயமா? . நாங்க பதினைஞ்சாம் தேதிக்குள்ளே கணக்கு கொடுக்கனும் அதுக்குத்தான் சொல்றோம்.
நீங்க கணக்கு கொடுக்கிறதுக்கு நாங்க என்னய்யா பண்ணமுடியும் …எங்களுக்கு காசு எப்ப கிடைக்குதோ அப்பதான் ரேசன் வாங்க முடியும். ஏழைக பொழப்பு இப்படித்தான் இருக்கு.
லோடு ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
அண்ணே இதுல பதினைஞ்சு சாக்கு இருக்கு கணக்கு வச்சுக்கோங்க. அண்ணே அப்புறமா வந்து பாக்குறேன்னார்.
சரி…சரி…நான் ஊருக்கு போகனும் …சீக்கிரமா வந்து பாக்க சொல்லு.
இந்தாதான் சாக்கு வந்துருச்சுல்ல…கணக்கு காட்டுறதுக்கு. கடைக்கு வரவேண்டிய சரக்கு எங்கேயோ போயிட்டு சாக்கு மட்டும் வருது. இதுக்குத்தான் இவங்க நம்மளைக்கண்டா வல்லுவல்லுன்னு விழுகிறாங்கே. யாரையும் பக்கத்துல அண்டவிடுறது இல்ல.
கோபமா பேசினாத்தான் சத்தமில்லாம சரக்கு வாங்கிட்டு போயிருவாங்கன்னு இப்படி பேசுறது. முத்தம்மா மனதுக்குள்ளே பேசிக்கொண்டாள்.
இந்தாம்மா …பையைப்புடி…
ஐயா கோதுமை…
கோதுமை அடுத்த மாதம்தாம்மா…ஒரு மாசத்துக்கு வாங்கினா ரெண்டு மாசத்துக்கு கோதுமை கிடையாது. ஏத்தனை தடவை சொல்றது.
கொஞ்சம் பாத்து …கொஞ்சமாவது கொடுங்கையா.
பிச்சை…என்னப்பா…வளவளன்னு அந்த பொம்பளைகிட்டே பேசிக்கிட்டு, சட்டுபுட்டுன்னு கொடுத்து அனுப்பு.
ஏங்க நீங்கதான் பேச சொல்றீங்க…பேசுன்னா…அதிகமா பேசுறென்னு சொல்றீங்க…இனிமே நீங்களே பேசிக்கோங்க…பிச்சை அமைதியானான். பொறுப்பாளரின் கண்கள் சிவந்தன.
இந்தாம்மா…ரேசன் வாங்க வந்தா வாங்குனோம்மா போனம்மான்னு இருக்கனும் அதைவிட்டுட்டு வளவளன்னு பேச்சை வளக்க கூடாது. இங்கே நாலு பேரு வந்து போற இடம்.
என்னங்கய்யா ஒரேதா ஏறி மிதிக்கிறீங்க …ரேசன் தானே வாங்க வந்தோம். உங்ககிட்டே தர்மம் கேட்டு வரலையே…என்னுடைய ரேசன் கார்டுக்கு என்ன கிடைக்கனுமோ அதை சத்தமில்லாம கொடுத்துட்டா நான் ஏங்கய்யா ஒங்ககிட்டே பேசுறேன்? . அதைவிட்டுட்டு பத்தாம் தேதிக்குள்ளே வரணும் பதினைங்சாம் தேதிக்குள்ளே வரணும்ன்னு ஏன் சொல்றீங்க.
சரி…சரி… போம்மா…அடுத்தமாதம் சீக்கிரம் வந்து வாங்கப்பாரு.
அதெப்படிங்க அந்த மாசம் எங்க கையில காசு எப்ப கிடைக்குதோ அப்பதாங்கய்யா வந்து வாங்க முடியும்.
பத்துபதினைந்து பேர் கூட்டமாக இருந்தும் ஒருவரும் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் தனக்கு கிடைக்கும் ரேசனில் எதுவும் குறைந்து விடுமொ என்று பேசாமல் வேடிக்கை பார்த்தனர். முத்தமா கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று மட்டும் அவர்கள் கண்கள் கூறியது.
முத்தம்மா முனங்கிக்கொண்டெ வந்தாள் . இவங்ககிட்டே ஒவ்வொரு மாசமும் ரேசன் வாங்குறதுக்குள்ளே உயிரு போகுது . பாடாபடுத்துறாங்கே. கத்தரிவெயில் கனலாய் கொதிக்க காற்றாய் வந்துகொண்டிருந்தாள் முத்தம்மா… எதிரே பையையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ரேசன் கடை நோக்கி ஓடினாள் ராக்கம்மா.
எதிரே வந்த முத்தமாவிடம் கேட்டாள், அக்கா …ரேசன் கடைல என்ன போடுறாங்க.
சண்டை போடுறாங்க…போ…என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள். முத்தமாவுக்கு இப்போது புரிந்தது மரகதம்மாள் சொல்லிவிட்டு சென்றது. ராக்கம்மா ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்தபடியே ரேசன் கடை நோக்கி நடந்தாள்.

Labels:
feeling,
Man,
Nature,
occupation
Sunday 22 June 2008
தின்னை…
மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு
ரெண்டு நாளா காணாமடி உன்னை
ஏங்குதடி எங்கவீட்டு தின்னை
பால்நிலவும் பார்த்துவிட்டு போகும்-உன்னை காணாது
பாற்கடலில் சென்று அது சாகும்
தேடிவரும் தென்றல் உன்னைக்காண
தேன்மொழியாள் நீ என்னைக்கண்டு நாண
பாடிவரும் வன்டினங்கள் மெல்ல
பாவையுன்னை புகழ்ந்து வார்த்தை சொல்ல
வாடிவிடும் மலரினங்கள் எல்லாம்-உன்னை காணாது
வானத்திலும் போர் தொடுக்க வில்லாம்
தேடுதடி என் மனசு உனனை
தேமிதேமி அழுகிறது என் தின்னை
மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு.

Subscribe to:
Posts (Atom)